கிறிஸ்துமஸ் முன்னிட்டு போர்டு, எல்இடி ஸ்டார்களின் விற்பனை அமோகம்.!

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். இப்பண்டிகையை முன்னிட்டு இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம்

அதேபோல், இயேசு பாலனாக மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணமாக வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள்

இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும் ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் குடில்களில் இடம் பெற்றிருக்கும்

அதேபோல் விழுப்புரத்தில் பழையப் பேருந்து நிலையம் அடுத்துள்ள வீர வாழி அம்மன் கோயில் தெரு, ரயில்வே நிலையம் ஆகிய பகுதிகளிலுள்ள கடைவீதிகளில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் தொங்கவிடப்படும் ஸ்டார்களின் விற்பனை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்

ஒவ்வொரு வருடமும் பலவிதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வருகிறது. காகித ஸ்டார்கள், பிளாஸ்டிக் ஸ்டார்கள், போர்டு ஸ்டார்கள், எல்இடி ஸ்டார்கள் என பல டிசைன்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன

இந்த வருடம் புதுவிதமாக எல்இடி வடிவமைப்பிலும், கிறிஸ்மஸ் தாத்தா ஆகியோரது உருவத்தையும் கொண்டு ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன

Stories

More

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரபகவான் கோவில்.!

திருவள்ளுவரைப் போற்றும் பிரான்ஸ் அரசு..!

மதுரையில இப்படி ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டா..?

ஸ்டார்கள் 25 ரூபாயில் தொடங்கி 750 ரூபாய் என்ற விலை வரை ஸ்டார்கள் விற்பனைக்கு உள்ளது

அதுபோல, கிறிஸ்துமஸ் மரங்களின் விற்பனையும், குடில்கள் செட் பொம்மைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது கடை உரிமையாளர் மன்னாய் நாயுடு தெரிவித்தார்

ஜல்லிகட்டுக்கே பேர் போன காங்கேயம் காளை காரி கருவாயன்.!