கண் திருஷ்டி மட்டுமல்ல கை கண்ட மருந்து இது தான்... ஆகாயத்தில் வளரும் கிழங்கின் சிறப்புகள்.! 

ஆகாயக் கருடன் கிழங்கை வீடுகளில் பலர் திருஷ்டிக்காகத் தொங்க விடுவது வழக்கம்

அதுபோல் மாடுகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், இந்தக் கிழங்கை விவசாயிகள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்

வெறும் திருஷ்டிக்காக மட்டும் வீடுகளில் பயன்படுத்தி வரும் பலருக்கும் இந்த ஆகாயக் கருடன் கிழங்கில் உள்ள மருத்துவக் குணநலன்கள் தெரிவதில்லை என அரசு சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

ஆகாயக் கருடன் கிழங்கு ஒரு சிறந்த கிருமி நாசினியாக உள்ளது. இந்தக் கிழங்கின் வாசத்திற்கு விஷ ஜந்துக்கள், பாம்புகள் உள்ளிட்டவை வராது

வீட்டின் வாசல்களில் கட்டி வைத்தால் வெளிக்காற்றைப் பயன்படுத்தி இந்தக் கிழங்கு பெரிதாக வளரும் தன்மை கொண்டது. இதன் காரணமாக ஆகாயக் கருடன் என இந்தக் கிழங்கிற்குப் பெயர் வந்துள்ளது

இந்தக் கிழங்கின் கஷாயம் விஷ முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் இந்தக் கிழங்கிற்கு மகத்தான பங்கு உண்டு

இந்தக் கிழங்கின் தோலை நீக்கி விட்டு, நன்றாக பவுடர் செய்து கீழ் வாதம் நோய் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது

இந்தக் கிழங்கில் கசப்புத் தன்மை அதிகமாக இருக்கும். உடல் பலவீனமான நோயாளிகளைத் தேற்றுவதற்கு இந்த மருந்து பயன்படும்

சர்க்கரை நோய்க்கும் சிறந்த மருந்தாக ஆகாயக் கருடன் கிழங்கு உள்ளது

next

கடலை ரசித்த படி மீண்டும் ரயிலில் பயணிக்கலாம்.!