தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள்.!

சிவந்த நிறத்தில் இருக்கக் கூடிய அத்திப்பழத்தை நேரடியாகவும் சாப்பிடலாம், உலர் பழமாகவும் சாப்பிடலாம்.

நாம் புதிதாக வாங்கும் அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர வைக்கப்பட்ட அத்திப்பழங்கள் நீண்ட காலத்திற்கு இருக்கும்.

மல்பெர்ரி குடும்ப வகையைச் சேர்ந்த இது எண்ணற்ற விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.

சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் போல அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். 

இதிலுள்ள நார்ச்சத்துக்கள் நம் செரிமான கட்டமைப்பை இலகுவானதாக மாற்றுகிறது மற்றும் மலம் பெருக்கியாக செயல்படுகிறது. இதனால் நீடித்த மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்

நார்ச்சத்து

1

நம் குடல் நலனை மேம்படுத்தக் கூடிய நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அத்திப்பழத்தில் உள்ளன.

நார்ச்சத்து

நம் உடலில் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் ரத்த சர்க்கரை அளவை அத்திப்பழங்கள் குறைக்கும். 

ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவு குறையும்

2

அத்திப்பழத்தில் உள்ள அப்சிசிக் அமிலம், மாலிக் அமிலம், குளோரோஜெனிக் அமிலம் ஆகியவை நம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.

ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவு குறையும்

இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை நம் எலும்பு உருவாக்கத்திலும், எலும்பு சீரமைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஊட்டச்சத்து

3

பற்கள் பலம் அடையவும் கால்சியம் சத்து அவசியமானது. கால்சியம் கொண்ட முட்டை மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பவர்கள் அத்திப்பழம் எடுத்துக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்து

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கூடிய பொட்டாசியம் சத்து இதில் உள்ளது. உடலில் சோடியம் சத்து மிகுதியாகுவதால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை இந்த பொட்டாசியம் சத்து கட்டுப்படுத்துகிறது.

தாதுக்கள்

4

நம் தசைகள், நரம்புகள் ஆகியவற்றை செயல்பாடுகளை ஊக்குவித்து, எலெக்ட்ரோலைட் சத்துக்களை தக்க வைக்கிறது.

தாதுக்கள்

விட்டமின் சி, இ, ஏ ஆகிய சத்துக்கள் இதில் உள்ளன. சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது & செல்களை மீட்டுருவாக்கம் செய்கிறது. அத்திப்பழம் சாப்பிட்டால் வயது முதிர்வு அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.

வைட்டமின்கள்

5

எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

நீங்கள் தினமும் சாப்பிட வேண்டிய  7 விதைகள்.!