நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ஜெரின் மேத்யூ எனும் இளைஞர் இசைக்கருவிகளை உபயோகப்படுத்துவது, வரைதல், பாட்டு பாடுவது,
புத்தகம், கவிதை எழுதுதல், மூன்று நிமிடங்களில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிபடுத்தியுள்ளார்
ஓவியம் வரைவதில் இவர் வல்லவராக திகழ்ந்து வருகிறார். முப்பது வகையான ஓவியங்களை இவர் அசாத்தியமாகவும் தத்ரூபமாகவும் வரைந்து அசத்தி வருகிறார்
புள்ளி வைத்து மட்டுமே வரையக்கூடிய ஓவியம், கிறுக்கல்கள் மூலமாக வரையக்கூடிய ஓவியம் என பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்
இது மட்டும் இன்றி எந்த ஒரு ஓவிய உபயோகரணங்கள் இன்றியும் வெறும் சார்ட் மற்றும் அடுப்புக்கரியை வைத்து மூன்று நிமிடத்தில் ஓவியம் வரைந்து அசரவைத்துள்ளார் ஜெரின் மேத்யூ
மூன்று நிமிடத்தில் இவர் வரைந்து அசத்திய தாஜ்மஹால் ஓவியம் பிரம்மிப்பிற்கு உள்ளாகும் விதத்தில் அமைந்திருப்பது அனைவரையும் வியக்கும் விதத்தில் உள்ளது