Black Section Separator

வயிற்று பிரச்சனைகளுக்கு அருமருந்தான முள்ளங்கி சட்னி ரெசிபி.!

முள்ளங்கி

முள்ளங்கி நல்ல அளவு தண்ணீர் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். மக்கள் பொதுவாக முள்ளங்கியை சாம்பார், சாலட், பராத்தா போன்று செய்து சாப்பிடுவார்கள்

இன்றுவரை, நீங்கள் முள்ளங்கியில் செய்யப்பட்ட பல உணவுகளை சாப்பிட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் எப்போதாவது முள்ளங்கி சட்னியை முயற்சித்திருக்கிறீர்களா.?

முள்ளங்கி சட்னி

முள்ளங்கி சட்னி சுவையில் காரமானது. நீங்கள் அதை தயார் செய்து மதிய உணவு அல்லது இரவு உணவில் சேர்த்து சாப்பிடலாம்

சிறிய முள்ளங்கி 50கி கொத்தமல்லி தழை 2 பச்சை மிளகாய் ருசிக்கேற்ப உப்பு 5 பூண்டு பல் எலுமிச்சை

தேவையான பொருட்கள்

White Scribbled Underline

செய்முறை படி 1

முள்ளங்கி சட்னி செய்ய, முதலில் முள்ளங்கியை நன்கு கழுவி பின்னர் அதை நன்றாக தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்

செய்முறை படி 2

அதன் பிறகு, மிக்ஸி ஜாரில் நறுக்கிய முள்ளங்கி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து இதனுடன் பூண்டு பல் சேர்த்துக் கொள்ளவும்

பழைய உணவை சூடுப்படுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா..?

மணமணக்கும் இறால் எண்ணெய் குழம்பு ரெசிபி...

இந்த தீபாவளிக்கு முந்திரி பாதாம் கட்லி செய்து அசத்துங்க.!

More Stories.

செய்முறை படி 3

பின் இவை அனைத்தையும் நன்றாக அரைத்து சட்னி செய்யவும். மேலும் தேவைப்பட்டால் நீங்கள் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்

செய்முறை படி 4

அதன் பிறகு, உப்பு, பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சேர்க்கவும். பின்னர் எல்லாவற்றையும் நன்றாக அரைத்து கொள்ளவும்

முள்ளங்கி சட்னி

அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி சட்னி தயார்..

தீபாவளி ஸ்பெஷல்: வீட்டில் சுவையான மொறு மொறு முறுக்கு செய்வது எப்படி.?