கி.பி., 14ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஒருவரது தளபதியான சாமந்தநாராயணன் என்பவர் தஞ்சையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சாமந்தான்குளத்தில் கீழை நரசிம்ம பெருமாள் கோவில் கட்டினார்.
அப்பகுதியை சாமந்த நாராயண சதுர்வேதிமங்களம் என பெயரிட்டு ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கினார். காலப்போக்கில் அக்குளம் சாமந்தான்குளம் என்றானது.
இக்குளம் நகரின் மையத்தில் உள்ளதால் இந்நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு முக்கிய காரணமாக விளங்கி வந்தது.
இந்த குளத்தின் மேல்கரையில் நாயக்கர் ஆட்சி காலத்தில் உருவான பழமைவாய்ந்த அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.
சாமந்தான் குளத்தின் கரை பகுதியில் சிறிய அளவிலான சத்தி வாய்ந்த தெய்வமாக இக்கோயில் இருந்து வருகிறது.
இக்கோயிலில் அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாத சுவாமி, சிவன் சக்தி, விநாயகர், சுப்ரமணியர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளன.
இக்கோயில் மராட்டிய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டு லோகநாத சுவாமி அமிர்தகுஜாம்பாள் ஆஞ்சனேயர் உட்பட பரிவார தெய்வங்களுடன் பொதுமக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
திருமண தடை நீங்கவும் நினைத்த காரியம் கை கூடவும் இக்கோயிலில் தஞ்சை மக்கள் தவறாமல் வழிபட்டு வருகின்றனர்.
90 ஆண்டுகளுக்கு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் திருப்பணிகள் நிறைவடைந்துமஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.