ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன எமி ஜாக்சன்...  காரணம் இதுதான்.!

லண்டனை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன்

'மதராசபட்டினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானார்

மதராசபட்டினம் படத்தில் வெள்ளைக்கார துரையம்மாவாக நடித்தார்

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான தனி இடத்தை முதல் படத்திலேயே பிடித்துவிட்டார்

நம்ம ஊரு பொண்ணு உணர்வை கொடுத்த எமி ஜாக்சனை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்

முதல் படத்தை தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, சிட்டி 2.0 போன்ற படங்களில் நடித்தார்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் எமி ஜாக்சனுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது

பார்த்ததும் மனதை கவரும் எமி ஜாக்சனுக்கு மவுசு எகிற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்

லண்டனில் செட்டிலாகியுள்ள எமி, அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்

தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் அருண் விஜயின் 'மிஷன் சாப்டர் 1'

மாடலிங் துறையில் கலக்கிவரும் எமி, தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார்

2019ல் திருமணம் நடக்கவிருந்தது, ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் காதல் முறிந்தது

அவர்கள் காதலிக்கும் போதே கர்ப்பமான எமிக்கு அழகான மகன் உள்ளார்

அதன் பின், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் எட் வெஸ்டவிக்கை காதலித்து வருகிறார் எமி

இவர்கள் இருவருக்கும் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது

திருமணம் இன்னும் சில நாட்களில் நடக்கவிருப்பதால் அதற்கான கொண்டாட்டத்தில் களமிறங்கியுள்ளார் எமி

சமீப காலமாக எமி ஜாக்சனா இது.? என்று கேட்கும் வகையில் அவரின் தோற்றம் முழுவதும் மாறியுள்ளது

பலரும் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறி வருகின்றனர்

மேலும், பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் எமி, ஏஞ்சலினா ஜோலி போல் இருப்பதாக கூறி வருகின்றனர்

இன்னும் பலர் முன்பு இருந்த எமி தான் அழகு என்று கூறி வருகின்றனர்

next

ஊதா நிற பேக்லெஸ் கவுனில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா.!