இந்துக்கள் பண்டிகைகளில் மிக முக்கியமான சிறப்பு வாய்ந்த பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது
அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படு உள்ளது
விநாயகர் சதுர்த்திக்காக ஒரு மாதத்திற்கு முன்பே விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்
அந்த வகையில் பூம்புகார் விற்பனை நிலையத்திலும் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி கலைக்கட்டி உள்ளது
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் மண்ணால் ஆன விநாயகர், காகித கூழ் விநாயகர், பஞ்சலோக விநாயகர், மரத்தால் ஆன விநாயகர், பித்தளையிலான விநாயகர்,கொண்டப்பள்ளி பொம்மைகள்,
தஞ்சாவூர் ஓவியத்திலான விநாயகர்,நூக்க மரத்திலான விநாயகர் என எக்கச்சக்கமான வகைகளில் விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன
10% சிறப்பு தள்ளுபடியுடன் செப்டம்பர் 2ம் தேதி துவங்கிய கண்காட்சி வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது
இக்கண்காட்சியில் ரூ.100 முதல் ரூ.4.5 லட்சம் வரையிலான விலை உயர்ந்த விநாயகர் சிலைகள் உள்ளது
மேலும் இது குறித்து தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்தி தேவி கூறுகையில், பூம்புகார் விற்பனை நிலையம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வட மாநிலத்தில் உள்ள டெல்லி கல்கத்தாவில் செயல்பட்டு வரும் பூம்புகாரிலும் கண்காட்சிகள் துவங்கியுள்ளது
அனைத்து இடங்களிலும் 10% சிறப்பு தள்ளுபடியுடன் கண்காட்சி நடைபெற்று வருகிறது
கைவினைப் பொருட்களால் மிக நேர்த்தியான முறையில் தயாரான கலை நயமிக்க விநாயகர் சிலைகளை வாங்கி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் என்று கூறினார்
ரூ.50 போதும்… காட்டுக்குள்ள ட்ரக்கிங் போகலாம் மற்றும் அருவியில் ஜாலியா குளிக்கலாம்.!