புதுச்சேரியைச் சேர்ந்தவர் கனகவேல், கட்டிடக்கலை நிபுணர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டும் தொழிலை செய்து வருகிறார்
ஆனால் இந்த காலகட்டத்தில் எவ்வளவுதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து பல்வேறு விதவிதமான டிசைன்களில் வீடுகள் கட்டினாலும், அதை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு கனகவேலில் கைவண்ணம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது
அதாவது ஒரு சிறிய இடம் கிடைத்தால் கூட அந்த இடத்தை கோபுரமாக ஜொலிக்க வைக்கும் திறமைமிக்க இந்த நிபுணரால் பழமை மாறாமல் பல வகையான வீடுகளை கட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்
குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு வித விதமான புதுமைகளை புகுத்தி வாடிக்கையாளர்களை மனம் குளிர வைத்து வருகிறார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதுடன் தொழிலில் அதிக வரவேற்பும் கிடைத்துள்ளது
அதாவது தற்போது இவர் கட்டி உள்ள வீடுகளில் சோழர்கால கட்டிடக்கலைகளில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றதோ, அத்தனையும் இடம்பெறும் அளவிற்கு வீடுகள் அமைத்து வழங்குகிறார்
குறிப்பாக ஒரு வீட்டில் துளசி மாடம், கன்னி மாடம், மாதவி குடில், பொன்னூஞ்சல் என சோழர்கால கட்டிடக்கலையை நினைவிற்கு கொண்டு வருகிறார்
மேலும் கட்டில் இல்லாமல் மெத்தை இல்லாமல் படுக்கையறைகள், குளிப்பதற்கான பிரத்யோகமான தொட்டிகள், கண்ணைக் கவரும் வகையில் குளியல் அறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இவர் செய்து வருகிறார்
அதாவது வண்ணமிகு வண்ணங்களை கொண்டு வீட்டின் உரிமையாளருக்கு என்ன நிறம் தேவையோ அந்த நிறத்தை வீட்டிற்கு அடித்து அவர்களை எண்ணத்தையும் ஈடு ஏற்றி வருகிறார்
இந்த கட்டிடக்கலை நிபுணரால் புதுச்சேரியில் கட்டிடக்கலையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது