சாமான்யர்களுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு விருந்து வைத்தது இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது
ஆனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி அவரது குடும்பத்தினர் கிராம மக்கள் 51 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்டிற்கும் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது
இதையொட்டி திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நாளை முதல் தொடங்கி 3 நாட்கள் உலகமே வியக்கும் வகையில் நடைபெறுகிறது
உலக மகா கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்கள், அரசியலின் டாப் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர் நாளை தொடங்கும் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்
அதற்கு முன்பாக மிகவும் சாமான்யர்களுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் கிராம மக்கள் 51 ,000 பேருக்கு நேற்றிரவு விருந்து வைத்துள்ளனர்
முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் அம்பானி குடும்பத்தினர்கள் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் டவுன்ஷிப் அருகே உள்ள ஜோக்வாட் கிராமத்தில் கிராம மக்களுக்கு பாரம்பரிய குஜராத்தி உணவை வழங்கினர்
உணவுக்குப் பிறகு, வந்திருந்தவர்கள் பாரம்பரிய நாட்டுப்புற இசையை ரசித்தனர். பிரபல குஜராத்தி பாடகர் கிர்திதன் காத்வி பாடல் நிகழ்ச்சி நடந்தது
குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஆனந்த் அம்பானி தனது திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை கிராம மக்களுக்கு உணவு வழங்கி தொடங்கியுள்ளார்.