Yellow Star
Yellow Star

அம்பானி வீட்டு திருமண விழா : 3 நாள் கொண்டாட்டங்கள்... முழு விவரம்.!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி

இவருக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் - ஷைலா மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் இன்று இரவு திருமணம் நடைபெறுகிறது

இந்நிலையில், அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் மூன்று நாள் திருமண விழாவின்  கொண்டாட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது

முக்கிய திருமண சடங்குகள் இன்று (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியுள்ளது

இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாளாக இருக்கும்

இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்

அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும்

முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெறும்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்

next

முகேஷ் அம்பானியின் இளைய மருமகள்.. யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட்.?