தேர் மீது காய்கறிகள், நவதானியங்களை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இக்கோயில் திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது

அன்று முதல் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சர்வ அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு காளியம்மன் முறம் ஏந்தி வீதி உலா வரும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது

இதன் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சியையொட்டி அம்மன் திருத்தேர் இப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக மயானத்திற்கு சென்றது

அங்கு பாவாடைராயன் மற்றும் பூஞ்சோலை வல்லாளராயன் கோட்டையை அழிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது

இனி வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு டாட்டா.. ரயில்வேயில் அதிரடி மாற்றங்கள்!

வாழ்நாளில் ஒருமுறை கூட தூங்காத உயிரினம் எது தெரியுமா..

நாய்கள் அதிகம் எதை விரும்புகிறது தெரியுமா?

More Stories.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மா, பலா, நவதானியங்கள் போன்றவைகளை திருத்தேர் முன் வாரி கொள்ளை விட்டு தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்

இந்த தேர்த்திருவிழாவை காண்பதற்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்