ரேசன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்... அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பொருள் இலவசம்.!

Scribbled Underline

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அந்த்யோதயா அன்ன யோஜனா (Antyodaya Anna Yojana (AAY) ) குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரைக்கு அளிக்கப்படும் மானியத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது  2026 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது

இதன் மூலம் அந்த்யோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு, நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒரு கிலோ சர்க்கரை விநியோகிக்க அரசு தொடர்ந்து மானியம் வழங்கும்

சர்க்கரையை கொள்முதல் செய்து விநியோகிக்கும் பொறுப்பு மாநில அரசுகளைச் சேர்ந்ததாகும். இந்தத் திட்டம் ஏழை மக்களுக்கும் சர்க்கரை கிடைக்க வழிவகை செய்வதுடன், அவர்களின் உணவில் ஆற்றலை சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதன் மூலம் நாட்டில் உள்ள சுமார் 1.89 கோடி அந்த்யோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஏற்கனவே பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்களை வழங்கி வருகிறது

இது தவிர, ‘பாரத் மைதா’, ‘பாரத் பருப்பு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை மலிவு விலையிலும், நியாயமான விலையிலும் விற்பனை செய்து வருகிறது

சுமார் 3 லட்சம் டன் பாரத் பருப்பு மற்றும் சுமார் 2.4 லட்சம் டன் பாரத் மைதா ஆகியவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன

285 வருடத்துக்கு முந்தைய எலுமிச்சை பழம்...

நெருப்பில் பாப்கார்ன் போட்டு எரிக்கும் பண்டிகை... ஏன் தெரியுமா.?

பூமி சுழல்வது ஒரு நொடி நின்றால் என்ன நடக்கும் தெரியுமா?

More Stories.

இதன்மூலம் மக்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் சர்க்கரையை உள்ளடக்கிய அனைத்து பொருட்களும் பெரும்பாலான ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது

தற்போது,சர்க்கரைக்கான மானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் மாநிலத்தில் உணவு மானியம் (Food subsidy bill) குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெறும் வயிற்றில் கொத்தமல்லி நீரின் ஆரோக்கிய நன்மைகள்.!