Aranmanai 4  Box Office

5 நாட்களில் இத்தனை கோடி ரூபாய் வசூலா.?

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

மே 3-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 5 நாட்களில் மட்டும் நல்ல வசூலை அள்ளி கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அரண்மனை 4 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து அதனை திரையிடும் தியேட்டர்களில் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது

அரண்மனை 4 திரைப்படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்தாலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குடும்பத்துடன் வருவதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்

இந்த படத்தில் கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை படத்துடைய 3 பாகங்கள் வெளிவந்துள்ளன

இந்நிலையில் அரண்மனை 4 படம் வெளியாகி 5 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

நடப்பு ஆண்டில் எந்த ஒரு தமிழ் படமும் குறிப்பிடும் வகையில் அதிக வசூலை பெறவில்லை

இந்த சூழலில் அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

next

‘குக் வித் கோமாளி’ ஷாலினி சோயா டிடிஎப் வாசனுடைய காதலியா.?