திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 102 ஆண்டுகள் பழமை வாய்ந்தது செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய மாணவர் படை உள்ளது இதன் மூலம் மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன
குறிப்பாக மாணவிகள் இரண்டு நிமிடத்தில் மூன்று லட்சம் விதை பந்துகள் தயார் செய்து மாஞ்சோலையில் போட்டுள்ளனர். இதற்காக இப்பள்ளி மாணவிகள் கின்னஸில் இடம் பெற்றுள்ளனர்
இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இப்பள்ளியின் அசோசியேடிவ் என்சிசி ஆபிசர் செல்வி கூறுகையில், “என்சிசி பற்றி நாம் அதிகமாக சிந்தித்திருக்க மாட்டோம்
பள்ளிப் பருவத்திலேயே சமூகத்தின் மீது அக்கறை செலுத்தும் விதத்தில் நமது குழந்தைகளை வழிநடத்த வேண்டும் என்றால் அதற்கு என்சிசி ஒரு நல்ல தேர்வாக இருக்கும்
நமது பிள்ளைகளை பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் போது அந்த துறையில் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற விருப்பம் நமக்கு இருக்கும்
அதுபோலவே, ராணுவத்திலோ, காவல்துறையிலோ, சமூக சேவையிலோ நமது பிள்ளை பிரகாசிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு என்சிசியில் சேர்ப்பது நல்ல முடிவாகும்
என்சிசியால் உங்கள் பிள்ளையின் ஒழுக்கம், நன்னடத்தை போன்ற பல விஷயங்கள் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாகும். இப்பள்ளியில் படித்த பலர் ராணுவம் காவல் துறையில் உள்ளனர்” என தெரிவித்தார்
இங்கு அளிக்கப்படும் பயிற்சியின் மூலம் ஒழுக்கம் நன்னடத்தையை கற்றுள்ளேன். இது நான் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என என்சிசியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தீக்ஷனா தெரிவித்தார்