விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது அழகிய மலையடிவார கிராமம் அத்திக்கோவில். விருதுநகர் மாவட்டத்தில் பாயும் முக்கிய நதியான அர்ஜூனா நதி இங்கு தான் உற்பத்தியாகிறது
அடர்ந்த பாதுகாப்பட்ட வனப்பகுதியில் இருந்து வரும் நீரோடைகளுக்கு உள்ளூர் மக்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் விடுமுறை தினங்கள் சென்று பொழுது கழித்து வருகின்றனர்
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அதில் இருந்து வரும் நீர் என பசுமை போர்த்திய சுழலை பார்க்கும் போது, வழக்கமான வெயில் அடிக்கும் விருதுநகரை பார்த்த நமக்கு புதிய அனுபவம் கிடைக்கும்
விருதுநகர் மாவட்டத்தை வறண்ட கந்தக பூமி என்று தான் பலர் கூறுவார்கள். ஆனால் இங்கும் பசுமையான பகுதிகள் உள்ளது என்பதற்கு இந்த அத்திக்கோவில் ஓர் சாட்சி
விருதுநகர் மாவட்டத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் சரி அங்கிருந்தபடியே நேராக வத்திராயிருப்பு வர வேண்டும். அங்கிருந்து கான்சாபுரம் செல்லும் வழியில் நாம் அத்திக்கோவிலை அடையலாம்
சிறிய குக்கிராமம் என்பதால் இங்கே பேருந்து வசதி பெரிதாக கிடையாது. அதனால் வரும் போது கார் பைக் போன்ற சொந்த வாகனங்களில் வருவது நல்லது
அதே போல் அடர்ந்த வனப்பகுதி என்பதால் தனியாக வருவதை தவிர்த்து குழுவாக செல்வதே சிறந்தது
தற்போது இந்த இடத்தை பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருப்பதால் இதுவரை அருகில் உள்ள மக்கள் மட்டுமே சென்று வருகின்றனர்