பார்த்த முதல் நொடியிலேயே காதல்.. ரஜினி - லதாவின் அழகிய காதல் கதை.!

லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது அவரது கல்லூரி இதழுக்காக 'தில்லுமுல்லு' படப்பிடிப்பில் ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வந்தார்

அந்த முதல் சந்திப்பிலேயே ரஜினி தனது வாழ்நாள் முழுவதும் லதாவுடன் கழிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்

ரஜினி தனது காதலை தெரிவித்தவுடன் சிறு பெண்ணான லதா சற்று கலங்கிவிட்டார். ஆனால் லதா தனது பெற்றோரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்

என்ன தான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் லதாவின் பெற்றோரை சந்தித்து பெண் கேட்க ரஜினிக்கு பயமாக இருந்ததாம். இதை ஒரு பேட்டியில் லதாவே தெரிவித்துள்ளார்

அதிர்ஷ்டவசமாக இவர்களின் காதலுக்கு இவரது சகோதரி உதவியுள்ளார். அவர் ஏற்கனவே சினிமா பின்னணி கொண்ட ஒருவரை திருமணம் செய்திருந்தார்

அவரின் உதவியுடனும், அவர் மீது அக்கறை உள்ள சில பெரியவர்களின் உதவியுடனும் லதாவின் பெற்றோரை சந்திக்கும் வேலையை செய்தார் ரஜினி

அந்த சந்திப்பும் நல்லபடியாக முடிய அதிர்ஷ்டவசமாக லதாவின் பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்

1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி பெரியோர்கள் சம்மதத்துடன் திருப்பதி ஏழு மலையான் கோயிலில் தென்னிந்திய முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது

லதா சிவப்பு பட்டிலும், ரஜினிகாந்த் பட்டு வேட்டி குர்தாவிலும் ஜொலித்தார்கள்

தொடர்ந்து 1982ம் ஆண்டு ஐஸ்வர்யாவும், 1984ம் ஆண்டு சவுந்தர்யாவும் பிறந்தனர். பின்னர் லதா பாடகி ஆனார். சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்

next

நெட்ஃபிளிக்ஸில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 சிறந்த தமிழ் திரைப்படங்கள்.!