நெல்லையில் பட்ஜெட் பிரண்ட்லி டூரிஸ்ட் ஸ்பாட் இதுதான்..!

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே ராஜவல்லிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மிக அழகான குளம் உள்ளது

இதில் என்ன விசேஷம் என்றால் இந்த கிராமத்திற்கு அடுத்து வரக்கூடிய அனைத்து கிராமங்களிலுமே குளங்கள் இருப்பது சிறப்பாகும். குறிப்பாக ராஜவல்லிபுரம் குளத்தில் பல்வேறு வகையான மரங்கள் சூழ்ந்துள்ளன

குளத்தில் தண்ணீரும் நிரம்பி வழிகின்றன. மறுகரையில் நெல்லையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய ரயில்வே தண்டவாளம் உள்ளது. அங்கு அடிக்கடி ரயில்கள் சென்று வருவதை பார்க்க முடியும். குளங்களில் உள்ளூர்காரர்கள் மட்டுமே குளித்து வருகின்றனர்

சுற்றி பார்க்க வரும் நபர்கள் அங்கு உள்ள கருப்பசாமி கோயில் மரத்திற்கு அடியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு குளம் மற்றும் அங்கு வரக்கூடிய பறவைகள் ரயில்கள் ஆகியவற்றை பார்த்துச் செல்கின்றனர்

குளங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில்,“குளங்கள் என்பவை சிறிய நீா்நிலைகள் தான். ஆனாலும் அவற்றிலிருந்து பெறப்படும் நன்மைகள் பல. இவை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருப்பதால், 

வீட்டுத் தேவைகள், கால்நடை வளர்ப்பு, குடிநீர், விவசாயம் போன்ற எல்லாவற்றுக்கும் உதவுகின்றன. இவை மற்ற நீா் ஆதாரங்களிலிருந்து பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன

கால்வாய், நிலத்தடி நீர்ப்பாசனத்துடன் ஒப்பிடும்போது இவை அளவில் சிறியவை என்பதால், எளிதாக நிர்வகிக்கலாம், பராமரிப்புச் செலவும் குறைவு

1000 கார்கள் திருட்டு.. போலி நீதிபதியாக வாழ்க்கை.. யார் இவர்?

கல்யாண புடவை ரூ.17 கோடி.. நெக்லஸ் ரூ.25கோடி.. காஸ்ட்லி திருமணம்

விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

More Stories.

பெரும்பாலான குளங்களின் பாசனப் பரப்பளவு சிறியது. இதனால் கால்வாய்ப் பாசனத்தில் ஏற்படுவதுபோல முன் மடை, கடை மடை விவசாயிகளுக்கு இடையில் எந்தவிதமான மோதலும் இல்லாமல், நீரைத் திறம்படப் பயன்படுத்த முடிகிறது

குளங்கள் மூலம் நீா்ப்பாசனம் பெறும் விவசாயிகள் பெரும்பாலும் வசதியற்ற சிறு குறு விவசாயிகளாக இருப்பதால், அவா்களின் வறுமையைக் குறைக்க இவை உதவுகின்றன. குளங்களில் நீரைச் சேமிப்பதால், கிணறுகளில் நிலத்தடி நீா்ச் சுரப்பு அதிகரிக்கிறது

முக்கியமாக, ஒவ்வொரு கிராமத்திலும் குளம், குட்டைகள் அமைந்திருப்பதால், பெண்கள் வீட்டுத் தேவைகளுக்குத் தண்ணீர் எடுக்க வெகுதூரம் நடக்க வேண்டியதில்லை” என தெரிவித்தனர்