நெல்லை ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அழகிய சாய்பாபா கோயில்.!

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை தோறும் மதியம் மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

அதாவது வண்ணாரப்பேட்டையில் காலை 10:30 மணிக்கு மற்றும் மாலை 5 மணிக்கு பேருந்துகள் புறப்பட்டு பாளை மார்க்கெட், சமாதானபுரம், ஹைக்கிரவுண்ட் ரவுண்டானா, தியாகராஜ நகர் வழியாக சாய்பாபா கோவிலுக்கு வந்தடையும்

கோயிலுக்கு வந்த பின்னர் மீண்டும் பக்தர்கள் வண்ணாரப்பேட்டைக்கு செல்ல அதே பேருந்து இயக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் வியாழன் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் மற்றும் மாலை வேலைகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது

இதுகுறித்து கோயில் நிர்வாகி சேகர் கூறுகையில் “தன்னால் முடிந்த அளவு பக்தர்களின் உதவியுடன் ஊர் பொதுமக்கள் ஆதரவுடன் கோயிலை கட்டினோம்

விலாசமாக கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் மேல் தளத்தில் பிரார்த்தனை கூடமும் கீழ் தளத்தில் பெரிய அன்னதான கூடமும் மையத்தில் பாபாவின் திரு உருவமும் நிறுவப்பட்டுள்ளன

மேலும் இந்த ஆலயத்தில் பாண்டுரங்கர் கணபதி விநாயகர் போன்ற தெய்வமூர்த்திகளும் அமைந்துள்ளன. அதோடு ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்காக பரிகார தலமும் அமைக்கப்பட்டுள்ளது

Stories

More

நம்ம மதுரையில செல்பி பாயிண்ட் வரப்போகுது...!

காண்போரை பிரமிக்க வைத்த கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி

நெல்லையில் குள்ளநரி வாழும் அழகிய மலைப்பகுதி பற்றி தெரியுமா!

மனித பிறவி எடுத்திருப்பது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக மட்டுமல்ல பிறர் நன்மைக்காக பாடுபடுவதற்காகவும் என்ற புரிதல் வேண்டும். அதற்காகவே கட்டப்பட்டதே இந்த பாபா ஆலயம்"என தெரிவித்தார்

மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.?