சுருளிக்கு சுற்றுலா போறீங்களா.? அப்போ இதை பாத்துட்டு போங்க.!

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது

இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது

இதனால் சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது

இதனால் வனப்பகுதியில் உள்ள காட்டு நீரோடைகள் சுருளி அருவியில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து உள்ளனர்

Stories

More

நெல்லையில் திருடர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

நம்பிக்கை சுடரொளியாக வாழும் திருநங்கை பிரகதி!

பட்டாசு இப்படி தான் வெடிக்கனும்..!

அருவிப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பணிகளில் பாதுகாப்பு கருதி அருவி பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்வரத்து சீரான பிறகு மீண்டும் அருவி திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்

புருவங்களை காணிக்கை அளிக்கும் பழங்குடிகள்.!