வாழைப்பழ தோலை கூட சாப்பிடலாமா? அதில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?

இயற்கை உரம்

வாழைப்பழத் தோல்களை மண்ணில் அல்லது உங்கள் தோட்டத்தின் அடிப்பகுதியைச் சுற்றி தழைக்கூளமாக வைக்கலாம். அவை  தாவரங்களுக்கு உணவளிக்க ஊட்டச்சத்துக்களை மண்ணில் வெளியிடும்.

வெள்ளிப் பொருட்களை பாலிஷ் செய்ய

வாழைப்பழத் தோலை ஒரு பேஸ்டாக அரைத்து உங்கள் வெள்ளிப்  பொருட்களில் தடவவும். சிறிது நேரம் கழித்து துடைத்தால்வெள்ளி பிரகாசமாக இருக்கும்

ஷூ பாலிஷ்

வாழைப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் பிற இயற்கை எண்ணெய்கள் சக்திவாய்ந்த, இயற்கையான ஷூ பாலிஷை உருவாக்குகின்றன

சிவப்பு அணுக்களை

வாழைப்பழ பழ தோல்கள் உங்கள் உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக பச்சை வாழைப்பழ தோல்கள் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது.

பற்கள்

வாழைப்பழ தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால் மஞ்சள் கரை நீங்கும், பல் ஆரோக்கியமும் மேம்படும்.

தோல்

உங்களுக்கு முகப்பரு அதிகம் இருந்தால், வாழைப்பழத்தின் தோலை பருக்கள் அதிகம் வரும் பகுதியில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும். இதனால் முகப்பருக்கள் குறைந்து தழும்புகளும் மறையும்.

மற்ற நன்மைகள்

வாழைப்பழம் தோல் தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு, பூச்சி கடித்தல், தடிப்புகள், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகள் குணமாவதற்கும் உதவுகிறது

உடல் எடையை குறைக்க உதவும் 

வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன. மேலும் இதிலுள்ள வைட்டமின் டீ12 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நரம்பு மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?