Pimples-க்கு டாட்டா காட்டும் நெய்!

ஈரப்பதமூட்டுதல்

நெய் உங்கள் வறண்ட சருமத்தை ஆற்றும் மற்றும் ஈரப்பதமாக்கும்

வறண்ட சருமத்திற்கு முற்றுப்புள்ளி

நீங்கள் கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு துளி நெய் எடுத்து முகத்தில் , கை , கால்களில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சி இல்லாமல் பாதுகாக்கும்.

சுருக்கங்கள் நீங்கும்

முகத்தில் சுருக்கங்கள் இருப்பின் நெய் தினமும் தடவ சுருக்கங்கள் நீங்கும். நெய்யில் விட்டமின் ஈ இருப்பதால் சருமத்தின் அழகை மேம்படுத்தும்.

குளியல் எண்ணெய்

குளிப்பதற்கு முன் வாசனை எண்ணெயுடன் 10 சொட்டு நெய் கலந்து கைகால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சூப்பர் ஃபிரெஷாக உணர்வீர்கள்.

பொலிவிழந்த சருமம்

சருமம் பொலிவிழந்து களையிழந்து காணப்பட்டால் நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பிரெஷான பொலிவு பெறும். கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம்.

வறண்ட உதடு

வறண்ட உதடுடன் போராடுகிறீர்கள் எனில் தினமும் நெய் தடவி வாருங்கள். வறட்சி மட்டுமன்றி பிங் உதடும் கிடைக்க்கும். தூங்கும் முன் தினமும் உதட்டில் நெய் தடவி மசாஜ் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கருமையான உதடு மாறும்.

பச்சை மிளகாயின் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள்.!