சுகர் முதல் கொலஸ்ட்ரால் வரை... முருங்கை கீரை தரும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

கொலஸ்ட்ராலை குறைக்கும்

முருங்கை மரத்தின் இலைகள் ஹை கொலஸ்ட்ராலுக்கு எதிரான நம்பகமான தீர்வை தரும். ஏற்ற இறக்கமான கொலஸ்ட்ரால் அளவுகள் சிக்கலான இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் முருங்கை இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அதிக கொலஸ்ட்ரால் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

அழற்சியை எதிர்த்து போராடும்

புற்றுநோய், மூட்டுவலி, முடக்கு வாதம் மற்றும் பல தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற கொடிய நோய்களுக்கு அழற்சி மூல காரணமாகும். ஐசோதியோசயனேட்ஸ் (isothiocyanates) இருப்பதால் முருங்கை இலைகள் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டவையாக இருக்கின்றன.

ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

ஐசோதியோசயனேட்ஸ் அழற்சியை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதகிறது. முருங்கை இலைகளில் உள்ள குர்செட்டின் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கல்லீரலைப் பாதுகாக்கும்

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கை இலைகள் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் முருங்கை இலைகள் காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் எதிர்மறை விளைவுகளை குறைக்கின்றன. இது மட்டுமின்றி, முருங்கை இலைகள் கல்லீரல் செல்களை சரிசெய்து, கல்லீரலை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து (oxidative damage) பாதுகாக்கிறது.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?