ஃபாக்ஸ் நட்ஸ் என்று அழைக்கப்படும் தாமரை விதைகள் என்பது தாமரை பூவிலிருந்து கிடைக்கின்றன.
தாமரை விதைகளை நாம் பயன்படுத்துவதால் நமக்கு 7 விதமான நன்மைகள் கிடைக்குமாம். இதை எப்படி சாப்பிடுவது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பது குறித்து இப்போது விரிவாக பார்க்கலாம்.
இதில் நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் மற்றும் விட்டமின் இ, விட்டமின் கே ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மலமிலக்கியாகவும் செயல்படுகிறது.
உடலின் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தாமரை விதைகளுக்கு உண்டு. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நம் உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
குறைவான கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுப் பொருளாக தாமரை விதைகள் இருக்கின்றன. நம் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக உயர்ந்து விடாது. அந்த வகையில் சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வைக்க இது உதவுகிறது.
இறைச்சி மற்றும் அசைவ உணவுகளில் புரதச்சத்து நிறைவாக இருக்கிறது , சைவ உணவு பிரியர்களுக்கு மாற்றாக தாமரை விதைகள் அமையும். ஏனென்றால் இதில் அபரிமிதமான புரதச்சத்து இருக்கிறது.
தாமரை விதைகளை எடுத்துக் கொண்டால் ஸ்ட்ரெஸ்-ஐ தூண்டும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்பட்டு நம் மனதில் அமைதி நிலவும்.
தாமரை விதைகள் ஊட்டச்சத்து மிகுந்தது மற்றும் ஆரோக்கியமானது என்றாலும் கூட, அதை சீரான அளவில் எடுத்துக் கொள்வதே நல்லதாகும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட நோய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை ஆலோசித்த பிறகு இதனை எடுத்துக் கொள்ளலாம்.