பெரும்பாலும் புற்றுநோய்கள் கீமோதெரபி மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன, ஆனால் மீண்டும் மீண்டும் வரும் புற்றுநோய்களைத் தடுக்கும் பல மூலிகைகள் உள்ளன, அவற்றில் மணத்தக்காளியும் ஒன்றாகும். இது வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் உட்பட பல புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்
மணத்தக்காளியில் ஆல்கலாய்டுகள் உள்ளதால் சோலனின் ஏ வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. நீங்கள் வலி மற்றும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், மணத்தக்காளியை தவறாமல் சாப்பிடுங்கள்.
இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, முடி மற்றும் சருமத்தின் முன்கூட்டிய வயதானதற்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடும்.
மணத்தக்காளி செடியில் இருந்து பழுத்த பழங்கள் பாரம்பரியமாக நீண்ட காலமாக ஆஸ்துமா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா, காசநோய் இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையின் பழங்களை பறித்து அப்படியே சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
அல்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேங்காய்ப்பால் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து சூப்பாக கொடுத்தால், இந்த பிரச்சனை எளிதில் குணமாகும். புண்ணுக்கு வழிவகுக்கும் அமிலச் சுரப்பை மணத்தக்காளி தடுக்கிறது என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது,
கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா உள்ளிட்ட கல்லீரல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமான ஹெபடைடிஸ் சி க்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
ணத்தக்காளி பழங்களின் சாறு க்யூலெக்ஸ் குயின்க்யூஃபாசியாடஸ் வகை கொசுக்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைத்து. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குவதில் மணத்தக்காளி பெரிதும் உதவுகிறது
கருவை பலப்படுத்துவதோடு கருவுற்ற பெண்களின் கரு வலிமையாக இருக்கவும் இந்த கீரையும், இந்த கீரையில் இருக்கும் பழமும் உதவுகிறது.
ஆண்களுக்கு கீரை சமையலில் இந்த மணத்தக்காளிக்கீரையை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். ஆண்களுக்கு தாது பலம் தருவதில் இந்த கீரை சிறப்பாக உதவுகிறது. விந்தணுக்களை வலிமை படுத்துவதிலும் இவை உதவுகிறது.
மணத்தக்காளி சிறுநீர் கோளாறை நீக்குவதோடு சிறுநீர் பிரியவும் வழி செய்யும். மலச்சிக்கல் இருந்தால் அவற்றையும் குணப்படுத்தும்.
வயிற்றிலும் உடல் உள்ளுறுப்பிலும் புண் இருந்தாலே அவை வாய் வழியாக வெளிப்படும். அப்படியான ஒன்றுதான் வாய்ப்புண்.அதிகளவு புண், வலி, எரிச்சல், சாப்பிடமுடியாத அளவுக்கு உபாதை இருந்தால் அந்த நேரத்தில் கை கொடுப்பது மணத்தக்காளி கீரைதான்.
அடிக்கடி மணத்தக்காளிக்கீரையை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் பிரச்சனை எப்போதுமே இல்லாமல் இருக்கும்.