கீரையை விட இரும்புச்சத்து நிறைந்த சைவ உணவுகள்!

பொதுவாக கீரை இரும்புச்சத்தின் சிறந்த மூலம் எனக் கூறப்படும் அதேவேளையில் அதிக இரும்புச்சத்து நிறைந்த மற்ற உணவுகளும் சந்தையில் உள்ளன.

கீரையை விட இரும்புச்சத்து அதிகம் நிறைந்த சைவ உணவுகளின் பட்டியல் இங்கே.

1 கப் உலர்ந்த ஆப்ரிகாட்ஸ் பழத்தில் 4.1 மி.கி இரும்புச்சத்து உள்ளது.

உலர்ந்த ஆப்ரிகாட்ஸ்

புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இந்த தானியம் காலை உணவுக்கு சிறந்தது. 1 கப் சமைத்த குயினோவாவில் சுமார் 2.8 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இதில்1 கப் பச்சை கீரையை விட 2 மடங்கு அதிகமாகும்.

குயினோவா

Glutten free கொண்ட அமர்நாத் ஒரு பழங்கால தானியமாகும். 1 கப் சமைத்த அமர்நாத்தில் 9 கிராம் புரதம் மற்றும் 5.17 மி.கி இரும்புச்சத்து உள்ளது. 

அமர்நாத்

அதிக இரும்புச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து  நிறைந்த பருப்பு ஒரு சமச்சீர் உணவிற்கு சிறந்த தேர்வாகும். 1 கப் சமைத்த பருப்பில் 6.6 மி.கி இரும்புச்சத்து உள்ளது.

பருப்பு

சியா விதைகளை காலை, மதியம், இரவு என எந்த வேளையிலும் சேர்க்கலாம் அல்லது ஊற வைத்து தனியாக சாப்பிடலாம். 100 கிராம் சியா விதையில் சுமார் 7.7 மி.கி இரும்புச்சத்து உள்ளது. அதே சமயம் கீரையில் வெறும் 2.2 மி.கி மட்டுமே உள்ளது.

சியா விதைகள்

100 கிராம் முந்திரியில் 6.68 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இது கீரையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்திரி

next

இதய ஆரோக்கியத்திற்கு உகந்த 5 சமையல் எண்ணெய்கள்!