கோடைவிடுமுறைக்கு ஈரோட்டில் பார்க்க வேண்டிய முக்கிய ஸ்பாட்.!
“அணை இன்றி முற்றுப்பெறாது நீரின் அழகு” என்பார்கள். அதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் சத்தியமங்கலத்தில் பவானி ஆறும், மாயாறும் கலக்கும் இடத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது
ஆசியாவிலேயே மிகவும் நீளமான அணையாக கருதப்படும் பவானிசாகரில் 32.8 டி.எம்.சி வரை நீர் தேக்கி வைக்கலாம். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுரமைல்கள் ஆகும்
நீலகிரி மலைத்தொடர்கள் தான் பவானி சாகரின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது
இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் போன்ற பகுதிகளில் இருக்கும் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது
கோபி, பவானி மற்றும் புளியம்பட்டி நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றுகிறது இந்த அணை
முழுக்க முழுக்க தமிழர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் பொறியாளர்களால் இந்த அணை கட்டப்பட்டது. மண்ணனை, கல்லணை என்று 8.78 கி.மீ நீளம் கொண்டிருக்கும்