தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்திருக்கிற குண்டாறு நீர் தேக்கம் சுமார் 32 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்தது ஒட்டி குண்டாறு நீர் தேக்கம் நிரம்பியுள்ளது.
குண்டாறு நீர்த்தேக்கம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலேயே அமைந்திருக்கிறதுனால பாக்குறதுக்கு ஒரு ரம்யமான உணர்வை கொடுக்கும்.
இங்கு அணை மட்டும் இல்லாம போட்டிங், ஜீப் சஃபாரி, பிரைவேட் வாட்டர் பால்ஸ் நிறைய அட்வென்ச்சர் ஆக்டிவிட்டீஸ் பண்ணலாம்.
குண்டாறு அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா துறையின் சார்பாக படகு போக்குவரத்து மற்றும் சாகச சுற்றுலா நடத்துவதற்கு இடம் தேர்வு செய்து அதற்கான வேலையும் நடந்துட்டு இருக்கு.
இதுல வாட்டர் ஸ்கூட்டர், மோட்டார்படகுகள், விரைவு படகுகள், மிதி படகுகள் என பல சாகச படகு சவாரிகலும் இதுல வரப்போகுதுன்னு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார்கள்.
இப்போதைக்கு இங்க பத்து பேர் பயணிக்க கூடிய மோட்டார் போட் இயங்கிட்டு இருக்கு. ஒரு நபருக்கு 50 ரூபாய் வசூல் செய்யறாங்க. பிரண்ட்ஸா இல்லனா பேமிலியா போகணும் அப்படின்னா 500 வசூலிக்கிறாங்க.