நாமக்கல் தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2ம் ஆண்டு புத்தகத்திருவிழா தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார்
மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தனர்
நாமக்கல் மாவட்டத்தில் 2-ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த புத்தகத்திருவிழா, வரும் பிப். 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன
பட்டிமன்றம் மற்றும் குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம் பேன்றவை இடம்பெற்றுள்ளன
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு அரசுதுறைகளின் பணிவிளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்க புகைப்படக்கண்காட்சி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன
தினசரி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைபோட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, படம் பார்த்து கதைசொல்லுதல், வினாடிவினா, மாறுவேடப்போட்டி,
பேச்சுப்போட்டி, நாடகம் உள்ளிட்ட போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது
இந்த புத்தகத் திருவிழாவினை காண நாமக்கல் மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரத்திலிருந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வந்த வண்ணமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது