ராதிகா மெர்ச்சண்ட் அபு ஜானி சந்தீப் கோஸ்லாவின் படைப்பை தனது திருமண விழாவில் அணிந்துள்ளார்
அபு சந்தீப்பின் ‘பனேட்டர் (panetar)’ என்ற நுணுக்கமான யோசனையை அவரது ஆடை வெளிப்படுத்தியது. இவை மணப்பெண்கள் பொதுவாக சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தை அணியும் குஜராத்தி பாரம்பரியம் ஆகும்
அவர் தலையில் அணிந்திருந்த 5 மீட்டருள்ள முக்காடு மற்றும் அவர் தோளில் அணிந்திருந்த டிஷ்யூவால் ஆண துப்பட்டா, அதிலிருந்த சிவப்பு நிற வேலைப்பாடுகள் அவர் ஆடையின் அழகை மேலும் மெருகேற்றியது
அவர் உடையில் இருக்கும் சிவப்பு நிற பாடர்கள் ஆடையின் அழகை தூக்கிக் காட்டியது
ஆடையின் வேலைப்பாடுகளைப் பற்றி பேசினோமானால் நக்க்ஷி, சாடி மற்றும் ஜர்தோசி ஆகியவற்றின் மிகச்சிறந்த கலவையாகும்
கையால் எம்ப்ராய்டரி மற்றும் ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட நுணுக்கமான மலர் வடிவ டிசைனைக் கொண்ட காலணியை அணிந்திருந்தார். தம்பா நெத்திச்சூட்டி மற்றும் சிவப்பு நிற பட்டாடை என ஜொலித்தார்
அவர் தலையில் அணிந்திருந்த முக்காடு மென்மையான ஜாலி மற்றும் கட் வொர்க் வேலைப்பாடுகளைக் கொண்டது
அத்துடன் 80 அங்குலம் நீலம் கொண்ட சர்தோசி வொர்க் செய்யப்பட்ட தனியாக பிரித்தெடுக்கக் கூடிய நீண்ட துப்பட்டா போன்ற ஒன்றையும் அணிந்திருந்தார்
அவரின் ஆடை அலங்காரத்தையே முழுமையாக்குவது அவர் கையில் அணிந்திந்த சிவப்பு நிற எம்ப்ராய்டரி வொர்க் செய்யப்பட்ட துப்பட்டா தான் என்று சொன்னால் மிகையாகாது
ராதிகா தனது உடைக்கு ஏற்றவாறு அதே சிவப்பு நிறத்தில் அணிந்திருந்த லிப்ஸ்டிக் அவரின் அழகைத் தூக்கிக் காட்டியது
அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இந்த ஆடையில் மணமகள் ராதிகாவின் இந்த ஃபோட்டோஷூட்டானது அரண்மனை போன்ற பின்னணியில் மயிலுடன் எடுக்கப்பட்டு, ஆகமொத்தத்தில் ராணி போன்று காட்சியளிக்கிறார்
ரஜினி முதல் தோனி வரை… ஆனந்த் அம்பானி திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள்.!