பல்லவர்களின் மாமல்லபுரம் போல மலையை குடைந்து கட்டிய குடைவரை கோயில்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. அதில் ஒன்று செவல்பட்டி குடைவரை கோயில்
பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி அருகே உள்ள அருணகிரிநாதர் மலை என்றழைக்கப்படும் மலைக்குன்றை குடைந்து இந்த கோவிலானது கட்டப்பட்டுள்ளது
மொத்தமாக இரண்டு அறைகளை கொண்ட இந்த ஆலயத்தில் மூலவர் அறையின் வெளிப்புறத்தில் பெருமாள், நடராஜர், விநாயகர், வாயிற் காவலர் போன்றோரின் புடைப்பு சிற்பங்கள் உள்ளது
மூலவர் அறை சிலையின்றி நீண்ட காலமாக இருந்த நிலையில், பிற்காலத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
ஆலயத்தின் மூலவர் என யார் என தெரியாத நிலைக்குச் தற்போது முதன்மை கடவுளாக உள்ள பெருமாளையே மூலவராக கருதி அவரது பெயரிலேயே இந்த கோவில் வழங்கப்பட்டு வருகிறது
ஒரே அறையில் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ள இந்த குடைவரை கோயில் செவல்பட்டி சுற்றுவட்டாரத்திலேயே பெரிய அளவில் அறியப்படாமல் தான் உள்ளது
பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால் தினசரி ஒரு வேளை பூஜை மட்டும் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெருமாளுக்கு உகந்த நாட்களில் மட்டும் ஓரளவுக்கு மக்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது
இதன் தொன்மை கருதி தமிழ்நாடு தொல்லியல்துறை சமீபத்தில் இந்த கோவில் உட்பட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 கோவில்களை மேம்படுத்த ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கோவிலின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் பட்சத்தில் இங்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பூங்காவில் இது மட்டும் தான் மிஸ்ஸிங்… சிவகங்கை பூங்கா குறித்து தஞ்சை மக்களின் கருத்து.!