கொங்கு மண்டலத்தில் இந்தப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு.!

இந்த ஆண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சமீபத்தில் சில நாட்களாக ‌ தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது

இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கொங்கு மண்டலத்தின் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் கூறுகையில், தென்மேற்கு வங்க கடலில் மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது

இதன் தாக்கத்தால் தென்மேற்கு பருவக்காற்று கேரள மற்றும் தமிழகத்தை நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

இதனால் ஜூன் மூன்றாம் தேதி வரை தமிழகத்தில் பெருவாரியான பகுதிக்கு வெப்ப சலன மழை இருக்கும்

குறிப்பாக சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி தென் உட்புற கர்நாடகா பெங்களூர் வட கொங்கு மண்டலம் ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பாலக்காடு கணுவாய் பகுதிக்கு மழை வாய்ப்பு குறைவு

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

மூன்றாம் தேதிக்குப் பிறகு எதிர்பார்க்கலாம். கோயம்புத்தூர் நகரில் அதிஷ்டம்இருந்தால் வாய்ப்புள்ளது. அதேபோல வட மற்றும் கிழக்கு கொங்கு மண்டல பகுதிகளுக்கு கண்டிப்பாக கனமழை வாய்ப்புள்ளது

நாமக்கல், கரூர், திருப்பூரில் வடக்கு பகுதி திண்டுக்கல் ஈரோடு ஆகிய கொங்கு மண்டலத்தின் அநேக பகுதிகளுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது

ஜூன் மூன்றாம் தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவ மழை சற்று தீவிரமடைந்து கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் மிதமான முதல் கனமழையை பெய்ய வாய்ப்புள்ளதாக என தெரிவித்துள்ளார்

next

கும்பக்கரை அருவியில் குளிக்க ரெடியா… இப்ப தான் அங்க குளிக்க சரியான நேரம்.!