வண்ண ஓவியங்களால் பளபளக்கும் கோவை காந்திபுரம் மேம்பாலம்.!

கோயம்புத்தூரில் உள்ள அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாநகராட்சி மற்றும் போலீசாரின்

அனுமதியின்றி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இதுகுறித்து கோவை மாநகராட்சி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மாநகராட்சி மற்றும் அரசு அனுமதியின்றி அரசு கட்டிடங்கள், 

மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே கோவை - திருச்சி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் தூண்களில் தேச தலைவர்கள் படம் ஒட்டப்பட்டதால் அங்கு போஸ்டர் ஒட்டப்படுவது முற்றிலுமாக ஒழிந்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களில் சோதனை முறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஓவியங்கள் வரையப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தற்போது காந்திபுரம் மேம்பால தாங்கு தூண்களில் கோவையின் அழகை பறைசாற்றும் விதமாக பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

கோவை குற்றாலம், பழைய 5 நம்பர் பேருந்து, ஹெல்மெட் விழிப்புணர்வு ஓவியங்கள், கோவையின் தொழில்கள், விமானப்படை வீரர்கள்,

மரங்கள் நிறைந்த பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன.

இதனால் காந்திபுரம் மேம்பாலத்தின் தாங்கு தூண்களை போஸ்டர்கள் ஒட்டி அசுத்தப்படுத்தும் கலாச்சாரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

திருச்சியில் பார்வையாளர்களை கவரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா.!