உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தின் கரைப்பகுதிகள் மேம்படுத்தப்பட்டு பூங்காக்கள், உணவகங்கள், ‘ஐ லவ் கோவை’ என்ற செல்பி பாயிண்டு அமைக்கப்பட்டுள்ளது
தினமும் ஏராளமான மக்கள் மற்றும் குழந்தைகள் இங்கு வந்து குளத்தின் அழகை ரசித்த படி, பூங்காவில் விளையாடி மகிழ்கின்றனர்
இதனிடையே கோவையில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திய பழைய இரும்பு பொருட்கள், எலெக்ட்ரானிக் கழிவுகளைக் கொண்டு விண்டேஜ் கார்,
கிராமபோன், தண்ணீர் குழாய் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது
இதனிடையே பெரியகுளத்திற்கு வந்து செல்லும் பறவைகளின் மாதிரிகளும் தற்போது கழிவுப் பொருட்கள் கொண்டு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வருகிறது
சென்னையை சேர்ந்த மூன்று சிற்பிகள் இணைந்து பெயிண்டட் ஸ்ட்ரோக், ஸ்னேக் பேர்ட், பெலிகான் உள்ளிட்ட பறவைகளின் மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர்
அடுத்த சில தினங்களில் இவை பெரிய குளத்தின் கரைப்பகுதியில் வைக்கப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்