வேஸ்ட் டு வெல்த் (Waste to Wealth) என்ற கருத்தின் அடிப்படையில் கோவையில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளைக் கொண்டு கார், டெலிபோன், கிராமஃபோன் உள்ளிட்ட பொருள்களின் பிரம்மாண்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு பெரியகுளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
கோவை மாவட்டத்தை அழகுற மாற்றும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் குளக்கரையில் வித்தியாசமான முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கையில் எடுத்துள்ளது
மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பிரம்மாண்ட செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன
கார், டெலிபோன், கிராமபோன், தண்ணீர் பம்ப் உள்ளிட்ட 5 பொருள்களின் பிரம்மாண்ட உருவங்கள் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன
பல்வேறு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட கம்ப்யூட்டர் கீபோர்டுகள், மவுஸ், ஹார்டு டிஸ்க் போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள், தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட இரும்பு கழிவுகள்
என மொத்தம் 5 டன் பொருட்களை கொண்டு இந்த பிரம்மாண்ட உருவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது