தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு.!

புவியில் பசுமை பரப்பை விரிவுபடுத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டு, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி குப்பை மேடுகளை பூத்துக் குலுங்கும் நந்தவனமாக மாற்றி வருகிறார் கோவையைச் சேர்ந்த பெண்மணி தேன்மொழி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த இவர் இயற்கை மீது அலாதி பிரியம் கொண்டவர். மக்கள் அனைவரும் பசுமைப்பரப்பை அதிகரித்திடுவதன் அவசியத்தை உணர்ந்திட வேண்டும் என்ற லட்சியத்தை சத்தமே இல்லாமல் செயல்படுத்தி வருகிறார்

இவரது குடியிருப்பு பகுதியில் 50 சென்ட் பரப்பளவில் ரிசர்வ் சைட் உள்ளது. பொதுவாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் ரிசர்வ் சைட்டுகள் அந்த பகுதி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டும்

அப்படி தேன்மொழியின் இல்லத்திற்கு அருகில் இருந்த ரிசர்வ் சைட் கேட்பாரற்று குப்பைகள் கொட்டும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்தது.

இதனிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து ரிசர்வ் சைட்டை மீட்ட தேன்மொழி அங்கு பூங்கா அமைத்துள்ளார்

இந்த பூங்காவில் மரக்கன்றுகள், பூச்செடிகள், பழ வகைகள் மற்றும் காய்கறி வகைகள் என 275 வகை தாவரங்கள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டுள்ளன

ஐந்தினை வகை மரங்கள், அரிய வகை பூச்செடிகள், நட்சத்திர மரக்கன்றுகள், கத்தரி, வெண்டை, பீட்ரூட், தக்காளி, பல்வேறு விதமான மிளகாய் செடிகள் உள்ளிட்ட காய்கறி செடிகளும்,

பப்பாளி, சப்போட்டா, இலந்தை, கொய்யா, வாழை, ஸ்டார் ஃப்ரூட், முள் சீதா உட்பட ஏராளமான பழ வகை மரங்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன

மேலும், இந்த நந்தவனத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், அமர்ந்து படிப்பதற்கான அமைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

50 சென்ட் பரப்பு கொண்ட ஒரு நிலத்தை பூங்காவாக மாற்றியதன் மூலம் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தேன்மொழி, கோவையில் இதே போல் பல இடங்களிலும் தனது சேவையை மேற்கொண்டு வருகிறார்

முட்டை மாஸ்… புதுக்கோட்டையின் ஃபேமஸ் ஃபுட் இதுதான்.!