விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஊமை நாடகம் மூலம் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
உலக குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1954 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதியை உலகளாவிய குழந்தைகள் தினமாக நிறுவியது
பல ஆண்டுகளாக ஐ.நா. குழந்தைகளின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தையும், 1959 மற்றும் 1989 இல் முறையே நவம்பர் 20 ஆம் தேதி குழந்தைகளின் உரிமைகள் பற்றிய மாநாட்டையும் ஏற்றுக்கொண்டது
இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் சார்பில் குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கான பிரச்சனை தடுப்பு தினத்தை முன்னிட்டு
குழந்தைகளுக்கான நடைபயணம் மற்றும் குழந்தை திருமணம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் குழந்தை திருமணத்திற்கு தடை என்ற கருத்தின் அடிப்படையில் ஊமை நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கல்லூரி மாணவிகள் தங்களுடைய ஊமை நாடகம் மூலம் அனைத்து பொதுமக்களையும் ஆழ்ந்த சிந்தனையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கான உதவி மையம் எண் 1098, பெண்களுக்கான உதவி மைய எண் 181, ஆண், பெண் மாணவர்களுக்கான உதவி மையம் எண் 14417,
சைபர் கிரைம் குற்ற சம்பந்தப்பட்ட உதவி எண் 1930, முதியோர்கள் உதவி மைய எண் 14567 ஆகிய உதவி எண்களை பயன்படுத்துமாறும்கேட்டுக் கொள்ளப்பட்டது
மேலும் ஊமை நாடகம் பற்றி கல்லூரி மாணவிகள் தெரிவிக்கையில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை சிறுவயதில் திருமணம் செய்து தரக்கூடாது கூடாது எனவும்அப்படி செய்தால் நிச்சயமாக அவர்களது வாழ்க்கை பாதிப்படையும் எனவும்,
முடிந்த அளவில் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் எனவும்உங்கள் பகுதியில் ஏதேனும் குழந்தை திருமண நடைபெற்றால் உதவி மைய எண்ணிற்கு அழைத்து தெரிவிக்க வேண்டும் எனவும்கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்