தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை படகு சவாரி குற்றால சீசனை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் குற்றாலத்திலுள்ள படகு குளம் 1993-ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாட்டு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தொடங்கப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் குற்றால சீசன் நேரங்களில் மட்டும் இது திறக்கப்படும். மற்ற காலங்களில் இது மூடப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் குற்றால சாரல் சீசன் மற்றும் குளத்தின் நீர் வரத்து ஆகியவற்றை பொருத்து படகு சவாரி தொடங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான சாரல் சீசனை முன்னிட்டு குற்றாலத்தில் ஜூலை 10-ம் தேதி படகு சவாரி தொடங்கப்பட்டது.
இரண்டு நபர் மிதி படகு, நான்கு நபர் மிதி படகு, 4 நபர் துடுப்பு படகு மற்றும் தனி நபர் படகும் இங்க உண்டு.
இரு நபர் மிதி படகுக்கு 150 ரூபாயும், நான்கு நபர் மிதி படகிற்கு 200 ரூபாயும், நான்கு நபர் துடுப்பு படகிற்கு 250 ரூபாய், தனிநபர் படகிற்க்கு 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
மேலும் படகு சவாரி செய்யும் இடத்திற்கு வெளியில் ஸ்ப்ரிங் பொட்டேட்டோ, ஸ்வீட் கான், மசாலா கான் என கிளைமேட்டுக்கு ஏற்ப காரசாரமா சாப்பிடுவதற்கு நிறைய வகையான உணவுகள் கிடைக்கும்.
படகு சவாரிக்கு பக்கத்திலேயே குட்டியா ஒரு விளையாட்டு பகுதியும் உள்ளது. ஊஞ்சல், சறுக்கல் என்று எல்லாத்துலயும் ஜாலியா குட்டிஸ் விளையாடி மகிழலாம்.