நாணயங்களாலேயே வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட்  உலகக் கோப்பை.!

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் திருச்சி நாணயவியல் கழகமும் இணைந்து கிரிக்கெட் உலகக் கோப்பை திருவிழாவை கொண்டாடும் வகையில் உலகக் கோப்பை இலச்சினை ஒன்றை வடிவமைத்துள்ளனர்

1950 முதல் 2023ம் ஆண்டு வரையிலான 651 பழங்கால இந்திய நாணயங்களை கொண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையின் இலச்சினையை வடிவமைத்தார் திருச்சி நாணயவியல் கழக செயலாளர் பத்ரிநாராயணன்

நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையின் இலச்சினையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்ட இலச்சினையானது திருச்சி சிங்காரத்தோப்பில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

இது கிரிக்கெட் உலகக் கோப்பை முடியும் நாளான நவம்பர் 19ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்படும் என திருச்சி மாவட்ட மைய நூலகப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்

இது குறித்து திருச்சி நாணயவியல் கழக செயலாளர் பத்ரிநாராயணன் கூறியதாவது, நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையின் இலச்சினையை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் 2019லேயே மனதில் தோன்றியதாகவும்,

Stories

More

கை கொடுத்த பாட்டி.. லியோ இயக்குனர் செய்தது என்ன தெரியுமா?

மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் இவ்வளவு லாபம் கிடைக்குதா?

பொன் மகன் சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?

இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து 15 நாட்களில் இதை வடிவமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் இதனை காண்பித்த போது நிறைய மகிழ்ச்சி அடைந்தார் எனவும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்

கொலு இப்படி தான் வைக்க வேண்டும்.!