வரலாற்று சிறப்புமிக்க வில்லூண்டி தீர்த்த பாலத்தின் கைப்பிடி தடுப்புச்சுவர் சேதம்... அச்சத்தில் பக்தர்கள்.!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அருகே தண்ணீர் ஊற்று கிராமத்தில் வரலாறு சிறப்பு மிக்க வில்லூண்டி தீர்த்தமானது அமைந்துள்ளது

இந்த தீர்த்தமானது ராமாயண வரலாற்றில் ராமபிரானால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த தீர்த்தம் கடற்கரையில் இருந்து நூறு மீட்டர் தூரத்திற்கு கடலுக்குள் அமைந்துள்ளது.

கடலுக்குள் அமைந்திருந்தாலும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து கிடைக்கும் நீர் நன்னீர் ஆகும்.

இந்த அதிசயத்தை காண அதிகளவில் பக்தர்கள் வருவதுண்டு, இதற்கு செல்ல கரையில் இருந்து பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

தற்போது அந்த பாலம் மழை மற்றும் பலத்த கடல்காற்றின் அரிப்பால் சேதமடைந்து பாலத்தின் கைப்பிடி தடுப்புச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதால் வயதான வடமாநில மூதாட்டி அதிலிருந்து கடலுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது

இதனால் பக்தர்கள் தீர்த்த கிணற்றினை அருகில் சென்று பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது

Stories

More

சிதைந்த நிலையில் அழிவை நோக்கி அரண்மனை மாளிகை ...

மதுரையில மினி டிரக்கிங் போகணுமா...!

நெல்லை ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அழகிய சாய்பாபா கோயில்

மேலும், அதை தொடர்ந்து இருபக்கமும் அமைந்திருக்கும் கைப்பிடி தடுப்புச்சுவர்களும் சேதமடைந்திருப்பதால் பக்தர்கள் கடலில் தவறி விழுந்துவிடுவோமா என்ற அச்சத்துடன் இந்த தீர்த்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தை கொண்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி உடைந்த கைப்பிடி தடுப்புசுவர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்

200 ரூபாயில் ட்ரக்கிங் போகலாம்… விருதுநகரில் ஒளிஞ்சு இருக்க மினி குற்றாலம்.!