வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பொழுது, அது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அசோகரியம், வயிற்று உப்புசம் மற்றும் குமட்டல் ஏற்படலாம்.
தேநீர் ஒரு டையூரிடிக் என்பதால், டீ குடித்த உடனே அதிகப்படியான நீர்ச்சத்து உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரவு முழுவதும் தண்ணீர் இல்லாமல் காலையில் நீர்ச்சத்து பற்றாக்குறை இருக்கக்கூடிய நேரத்தில் நீங்கள் டீ அருந்தும் பொழுது இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

டீயில் இயற்கை அமிலங்கள் இருப்பதன் காரணமாக, அது ஈறுகளை அழித்து விடக்கூடும். குறிப்பாக அதிக அளவிலான தேநீரை நீண்ட காலத்திற்கு பருகி வரும் பொழுது பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலையில் உங்கள் உடலை மறுசீரமைக்க வெந்தயம் அல்லது எலுமிச்சை நீரை கூட நீங்கள் பருகலாம். கற்றாழை சாறு, இளநீர், தேன், ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சில துளிகள் சேர்க்கப்பட்ட தண்ணீர் போன்றவையும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காலை பானங்கள் ஆகும்.