கொலஸ்ட்ரால் பற்றி இதையெல்லாம் சொன்ன நம்பாதீங்க.. இதுதான் உண்மை..!

கொலஸ்ட்ரால் நம் ஆரோக்கியத்திற்கு எப்போதும் தீங்கானது.!!

இல்லை, அதிக கொலஸ்ட்ரால் அளவு தான் நம் உடலுக்கு தீங்கானது. கொலஸ்ட்ரால் நம் உடலில் நார்மல் லெவலில் இருப்பது பல செயல்பாடுகளில் முக்கிய பங்களிக்கிறது 

'நல்ல' கொலஸ்ட்ரால் உடலுக்கு எப்போதுமே நல்லது தான்.!!

HDL (High-density lipoprotein) எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன்களை அளிக்கிறது. ஆனால் அதன் அளவுகள் குறித்து யாரும் பெரிய விஷயமாக கருதுவதில்லை. உண்மை என்னவென்றால் லோ-லெவல் HDL ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. போதுமான அளவு HDL நம் உடலில் இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அதன் அளவை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த சர்க்கரை அளவு போன்ற வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் உள்ள நபர்களுக்கு HDL கொலஸ்ட்ராலின் லெவல் குறைவாக இருக்கும்.

இளவயதினர் கொலஸ்ட்ரால் டெஸ்ட் செய்ய தேவையில்லை.!!

கொலஸ்ட்ரால் டெஸ்ட் தொடர்பான இந்த சிந்தனை மக்களிடையே மாற வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். ஒருவர் தனது 20 வயதில் இருந்தே கொலஸ்ட்ரால் லெவலை தொடர்ந்து கண்காணிக்க துவங்க வேண்டும். சமீப காலமாக இளைஞர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இளவயதினர் தங்கள் கொலஸ்ட்ரால் லெவலை கண்காணிக்க தயங்க கூடாது என்றும் கூறப்படுகிறது.

ட்ரைகிளிசரைட்ஸ் லெவல் ஒரு பொருட்டல்ல.!!

Triglycerides முக்கியமானவை தான் மற்றும் இந்த கொலஸ்ட்ரால் காம்போனென்ட்ஸ் ஹை லெவலில் இருந்தால் அதனை புறக்கணிக்க கூடாது. பொதுவாக கொலஸ்ட்ரால் காம்போனென்ட்ஸ்களின் பின்னால் உள்ள அறிவியல் மிக சிக்கலானது. எனினும் Triglycerides லெவல் அதிகமாக இருப்பது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கணைய அழற்சி உள்ளிட்டவை ஏற்படுவதற்கான அபாயங்களை அதிகரிக்கின்றன.

கொலஸ்ட்ரால் லெவல் குறைவாக இருந்தால் இதய அபாயங்கள் ஏற்படாது.!!

உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் லெவல் குறைவாக இருந்தால் இதய நோய்கள் முற்றிலும் வரவே வராது என்று அர்த்தமல்ல. இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று குறைவாக உள்ளது என்று வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம்.

மருந்துகள் இல்லாமலும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்.!!

இது உண்மை இல்லை, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் மருத்துவர் மற்றும் மருத்துகளின் பங்கை குறைத்து மதிப்பிட கூடாது. கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்துவதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒரு பகுதியே தவிர, கொலஸ்ட்ராலால் ஏற்படும் ஆபத்து காரணிகளை முற்றிலும் குறைக்காது. ஒருவர் தனக்கிருக்கும் கொலஸ்ட்ரால் லெவலை குறைத்து கட்டுப்படுத்த மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கிய ஆரோக்கியமான உத்தியை பின்பற்ற வேண்டும்.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?