ஊட்டியில் இப்படி ஒரு வியூ பாயிண்டா.?

எண்ணற்ற சுற்றுலாத்தலங்களை  தன் வசம் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மலைத்தொடர்களின் அழகை கண்டு மகிழ காட்சி முனைகளுக்கும் இங்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது

அந்த வகையில் புகழ்பெற்ற காட்சி முனைகளில் ஒன்றாக குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இருந்து வருகிறது

குன்னூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த டால்பின் நோஸ் காட்சி முனை செல்லும் வழி எங்கிலும்  பச்சை போர்வை போர்த்திய தேயிலை தோட்டங்கள் சுற்றுலா பயணிகளின் மனதை கட்டி இழுத்து விடுகிறது

மேலும் இங்கு செல்லும் பாதையானது மிகவும் இரக்கமான பாதை என்பதால் வாகனங்களை சற்று கவனத்துடன் இயக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த காட்சி முனை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே வாகன நிறுத்தங்கள் இருப்பதால் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் தாராளமாக இந்த காட்சி முனைக்கு சென்று ரசிக்கலாம்

Stories

More

திருப்பதி போக முடியலையா கவலை வேண்டாம்..

பெண்களுக்கு பிடித்த வளையல்களில் இத்தனை வகைகள் இருக்கா..?

குற்றாலம் ஐந்து அருவிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா..?

உள்ளே நுழைய நுழைவு கட்டணம் வாங்கிய பிறகு குரங்கு கூட்டங்கள் நம்மை வரவேற்கும்.  இந்த பகுதியில் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறது. அவை செய்யும் சேட்டைகளும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது

தொடர்ந்து பயணித்தால் காட்சி முனை கண்முன்னே தெரிகிறது. டால்ஃபினின் மூக்கு போன்று அமைந்திருப்பதால் இதற்கு டால்பின் நோஸ் என்று அழைக்கப்படுகிறது

இந்த காட்சி முனையில் இருந்து பார்த்தால். ஒரு புறத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் கேத்தரின் நீர்வீழ்ச்சி,மற்றொரு புறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அங்காங்கே சிறு சிறு கிராமங்கள், மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளின்  பிரம்மிக்க வைக்கும் காட்சிகளை காணலாம்

குற்றாலம் ஐந்து அருவிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா.?