ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு குட்நியூஸ்... இனி ரேஷன் கார்டு தேவையில்லை.. வந்தாச்சு சூப்பர் ஆப்.!

ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு பயன்பாடு வந்ததில் இருந்து, எஸ்.எம்.எஸ் அனுப்புவது, பயோமெட்ரிக் என ஒவ்வொன்றாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது

அந்த வகையில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்த TNePDS என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த செயலி மூலம் ரேசன் சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்

முன்பெல்லாம் பழைய ரேசன் கார்டு பயன்பாட்டில் இருந்த போது, அதில் உள்ள அட்டவணையில் ஒவ்வொரு மாதமும் நாம் வாங்கிய பொருட்களின் விபரங்களை குறிப்பிடுவார்கள்

ஆனால் ஸ்மார்ட் கார்டு வந்ததில் இருந்து அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனதால், பொதுமக்கள் அதை தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தனர். ஆனால் இந்த செயலியில் உள்ள பரிவர்த்தனைகளில் தெரிந்து கொள்ளலாம்

குடும்ப உறுப்பினர்களாக யார் யார் இருக்கிறார்கள் போன்ற விபரங்களை எண் விவரக்குறிப்பிலும், நமக்கு எவ்வளவு பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பொருட்கள் வாரியாக உரிமம் பகுதியிலும் தெரிந்து கொள்ளலாம்

இப்போது எதாவது பொருள் கூடுதலாக தேவை என்றால் அதை என் விருப்பம் பக்கத்திலும், புகார்களை புகார் என்ற பக்கத்திலும் பதிவு செய்யலாம். இதே போன்று கருத்துக்களை இங்கு பதிவிடும் வசதியும் உள்ளது

இதே போல கடையின் முகவரி, அமைவிடம், கடையின் விடுமுறை நாட்கள், வேலை நேரம் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்

இந்த மொபைல் செயலியை இன்ஸ்டால் செய்வதன் மூலம் ரேசன் கார்டு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

இந்த செயலியில் ஒவ்வொரு முறையும் லாகின் செய்ய ரேசன் கடையில் ரேசன் கார்டுக்கு பதிவு செய்த மொபைல் எண்ணையும், அதன் OTP ம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

next

பூலோக சொர்க்கத்தை கண்முன் நிறுத்தும் சூப்பர் ஸ்பாட்… பெரிய பாலி நீர்வீழ்ச்சி பற்றி தெரியுமா.?