பொதுவாக வாழைமரத்தில் இல்லை, காய், பூ, தண்டு என அனைத்தும் உண்ணக்கூடியதாகும். செடியின் தண்டுப்பகுதி சாப்பிடுவதற்கு எவ்வளவு ருசியாக இருக்கிறதோ, அவ்வளவு சத்துக்கள் நிறைந்தது.
பலர் வாழைத்தண்டுகளை வீணாக வீசுகின்றனர். ஆனால் வாழைத்தண்டு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இதில் நார்ச்சத்து நிரைந்திருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துவர செரிமானம் சீராகும்
கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த… இதில் வைட்டமின் B6 நிறைந்தது, பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
இது உடலில் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சமநிலையை பராமரிக்கிறது. நெஞ்செரிச்சல், அசௌகரியம் மற்றும் வயிற்றுவலி ஆகியவற்றை குணப்படுத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது, அதனால் இதை சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
பித்தப்பையை சுத்தமாக வைத்திருக்க….. இது பித்தப்பையை சுத்தமாக வைத்து சிறுநீரக கற்கள் சேராமல் தடுக்கிறது.
பித்தப்பையை சுத்தமாக வைத்திருக்க….. இது பித்தப்பையை சுத்தமாக வைத்து சிறுநீரக கற்கள் சேராமல் தடுக்கிறது.
உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், சிறுநீரக கற்களை இயற்கையான முறையில் அகற்றவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
வைட்டமின் B6, இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன.
தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!