திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல அனுமதி... ஆனால் சத்தம் போடக்கூடாதாம்.!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் பழமை வாய்ந்த திருமலை நம்பி கோயில் உள்ளது

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயில்களுக்கு வாரம் தோறும் சனிக்கிழமைகளில் கூட்டமாக பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்

தமிழ் மாத கடைசி மற்றும் முதல் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்தும் திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் வருகை புரிகின்றனர்

இந்நிலையில் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 21 ஆம் தேதி முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது

இதையொட்டி திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். புலிகள் கணக்கெடுப்பு பணி முடிந்த நிலையில், களக்காடு புலிகள் காப்பக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மார்ச் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடக்கிறது

1000 கார்கள் திருட்டு.. போலி நீதிபதியாக வாழ்க்கை.. யார் இவர்?

கல்யாண புடவை ரூ.17 கோடி.. நெக்லஸ் ரூ.25கோடி.. காஸ்ட்லி திருமணம்

விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

More Stories.

இந்நிலையில் நாளை முதல் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் வனப்பகுதியில் சத்தும் எழுப்பக் கூடாது போன்ற நிபந்தனைகள்விதிக்கப்பட்டுள்ளது