சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல அனுமதி.!

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு தூய்மைப் பணி காரணமாக பொதுமக்கள் செல்ல ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டது

சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா முடிந்த பிறகு பக்தர்கள் கீழே இறங்குவதற்காக அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன

ஆகஸ்ட் 19 , 20, 21 ஆகிய மூன்று நாட்கள் தூய்மை பணி காரணமாக அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது 

தூய்மைப் பணியாளர் தூய்மை பணிக்காக செல்லும் வாகனங்கள் தவிர்த்து அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்படாது

ஆகவே இந்த மூன்று நாட்களுக்கு பாபநாசம் சோதனை சாவடி மூடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் பணிகள் முடிந்ததால் பொதுமக்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் வழக்கம் போல் சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவிக்கு சென்று வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா.?