தனுஷ்கோடி மீனவர்களின் ஸ்பெஷல் ’இறால் கிரேவி’... செஞ்சி பாருங்க வீடே மணக்கும்.!
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 50-க்கும் மேற்பட்ட கடல் உணவு கடைகள் உள்ளன
இங்கு உள்ள கடைகளில் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பாசிகள், பவளப்பாறைகளை உண்டு பல்வேறு வகையான மீன்கள் வாழ்கின்றன
எந்தவொரு கழிவுகளும் கலக்காத சுத்தமான கடலில் வாழ்வதால் இந்த மீன்களுக்கு இயற்கையாகவே சுவை அதிகம்
இங்கு செய்யப்படும் இறால் உணவுகளை உண்பதற்கு சுற்றுலா பயணிகள் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்
இதற்கு காரணம் சுவை மிகுந்த இறால்களும், தனுஷ்கோடி மீனவர்களின் கை பக்குவமும் தான். இந்த இறால் கிரேவி எப்படி செய்வது என்பதை இங்கே பார்ப்போம்
முதலில் இறால்களில் உள்ள தோளினை நீக்கி அதில் கடல்பாசி, ஜாதிக்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகு தூள் போன்றவற்றுடன் பட்டை, கிராம்பு, ஆகிய இயற்கை பொருட்களுடன் சேர்த்து மசாலாவை தயார் செய்து வைக்கின்றனர்
பொதுவாக உணவுகளில் கடல்பாசி மற்றும் ஜாதிக்காய் சேர்ப்பதால் அதீத மணமிக்கதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்
இந்த மசாலாவை இறால் முழுவதும் தடவி, நன்றாக அரைமணி நேரத்தில் இருந்து ஒருமணி நேரம் வரையில் ஊறவைத்து பின்பு பெரிய அளவிலான மீன் பொறிக்கும் கல்லில் வைத்து கிரேவி செய்ய தொடங்குகின்றனர்
கல்லில் போட்ட பிறகு மீண்டும் மசாலா தூள் போடப்படுகிறது. கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் போன்றவற்றுடன் நன்றாக வேக வைத்து சிறிதாக தக்காளி ஜாசும் சேர்த்து அரைமணி நேரம் வரையில் நன்றாக பிரட்டி எடுத்தால் சுவையான இறால் கிரேவி தயார் ஆகிவிடும்
இதனை மீன் குழம்பு, ரசம் போன்றவற்றுடன் சாப்பிடும்போது அலாதியான சுவையை தரும்