இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தவிர்ப்பதற்கான வழிகள்!

உடலின் நீரிழப்பு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க அதிக தன்ணீர் குடிக்கவும்.

உடல் பருமன் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை கடினமாக்குகிறது. என்வே நீரிழிவு நோயாளிகளுக்கு எடை மேலாண்மை முக்கியமானது.

ஒவ்வொருமுறை உணவு உண்டபின் சிறிது நேரம் நடப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளிடையே இருக்கும் சிறந்த பழக்கமாகும்.

உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து அதிக நார்ச்சத்து மிகுதியாக இருக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் திடீரென உயரும் சர்க்கரை அளவின் அபாயத்தைக் குறைக்கலாம்.

நேரத்திற்கு சாப்பிடுவது , இரவு உணவை சீக்கிரமே சாப்பிடுவது போன்ற வழக்கங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரித்து ஊட்டச்சத்துகளை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

அதிகபடியான மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. எனவே அன்றாடம் ஏற்படும் மன அழுத்தங்களை சரியாக நிரகிக்க வேண்டியது அவசியம்.

அளவாக சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

next

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!