சர்வதேச ஓட்டப்பந்தய போட்டிக்கு மாற்றுத்திறனாளி மாணவி சுபஸ்ரீ பி தகுதி.!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாய் மற்றும் காது கேளாத மாற்று திறனாளி மாணவியான சுபஸ்ரீ பி. என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். எட்டு வயது முதல் 17வயது வரை தொடர்ச்சியாக ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என கடுமையான பயிற்சி பெற்று வந்துள்ளார்

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு M.R.I.C பள்ளியில் பயிலும் போது மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர், 4×100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்க பதக்கங்ளை அள்ளி குவித்தார்

அதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு சென்னையில் நடந்த சி.எம். டிராபி தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து 50 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றார்

அதன் தொடர்ச்சியாக சுபஸ்ரீயின் விடாமுயற்சியால் 2023 அக்டோபர் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்கான இந்திய தடகள அணிக்கான தேர்வு போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 13.77 செகண்ட்ஸ் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை1.16 செகண்ட்ஸில் தேர்வு பெற்றார்

இந்த போட்டியில் தேர்வு பெற்றதன் மூலம், ஜனவரி 2024 ஆம் ஆண்டு 15 முதல் 24 வரை பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள காதுகேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான உலக அளவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சுபஸ்ரீ கலந்து கொள்கிறார்

நிச்சயமாக சுபஸ்ரீ வெற்றி பெற்று தமிழகத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் எனவெற்றி குறித்து அவருக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்

Stories

More

தண்ணீரால் சூழ்ந்த  கிராமம்...!

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

மேலும் சுபஸ்ரீ மாணவிக்கு மற்றவர்கள் உதவி புரிந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விழுப்புரத்தில் தயாராகி உள்ள பல வண்ண அகல் விளக்குகள்.!